கொலவெறியை தர லோக்கலாக தட்டித் தூக்கிய ரவுடி பேபி

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

தனுஷ்-சாய் பல்லவி நடித்த ‘மாரி 2’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ரவுடி பேபி’ பாடல் தான் அதிக முறை யூடியூபில் பார்க்கப்பட்ட பாடல் என்ற சாதனையை படைத்துள்ளது.

Dhanush's Rowdy baby becomes the most highest viewed Tamil Song in Youtube

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி, டோவினோ தாமஸ், ரோபோ ஷங்கர், கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்த 'மாரி 2' படம் கடந்த ஆண்டு இறுதியில் வெளியானது.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்த இப்படத்தில் வரும் ‘ரவுடி பேபி’ பாடல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. நடனப்புயல் பிரபுதேவா நடனம் அமைத்து தனுஷ்-சாய் பல்லவி இருவரும் சேர்ந்து பட்டையை கிளப்பிய ‘ரவுடி பேபி’ பாடல் வீடியோ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று பில்போர்ட் இசை பட்டியலில் இடம்பிடித்தது.  

யூடியூபில் 10 கோடி பார்வையாளர்களை கடந்த முதல் தமிழ் பாடல் என்ற சாதனையை ‘ரவுடி பேபி’ பாடல் நிகழ்த்தியது. அதைத் தொடர்ந்து தற்போது மேலும் ஒரு சாதனையை படைத்துள்ளது. கடந்த 7 ஆண்டுகளாக யூடியூபில் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் பாடல்களில் தனுஷ்-அனிருத் கூட்டணியில் உலகம் முழுவதும் வைரலான ‘கொலவெறி’ பாடல் தான் முன்னிலையில் இருந்தது.

தற்போது அந்த சாதனையை முறியடித்து, தனுஷ்-யுவன் கூட்டணியில் தர லோக்கல் ஹிட்டான ‘ரவுடி பேபி’ பாடல் முதலிடத்தை பிடித்துள்ளது. அதுவும் ஒரே மாதத்தில் 17.5 கோடி பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.

கொலவெறியை தர லோக்கலாக தட்டித் தூக்கிய ரவுடி பேபி VIDEO