'தரமணி'க்கு பிறகு ராம் இயக்கியிருக்கும் படம் 'பேரன்பு'. மம்முட்டி, அஞ்சலி, சாதனா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் இந்த படம் வருகிற வெள்ளிக்கிழமை (Feb 1) வெளியாகவுள்ளது.
பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட இந்த படம் விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை அஞ்சலி Behindwoods தளத்துக்கு பேட்டியளித்தார்.
அதில், ராம் படங்களின் படப்பிடிப்பு தளம் மகவும் சீரியஸாக இருக்கும் என நினைக்கிறார்கள். அப்படி எல்லாம் இருக்காது. இந்த படத்தின் படப்பிடிப்பில் நான் ஜாலியாக பாட்டுப் பாடிக்கொண்டிருந்தேன். அது மேக்கிங் வீடியோ பார்த்தால் தெரிந்திருக்கும். ஆளுமா டோலுமானு நானும் சாதனாவும் பாட்டு பாடிட்டு இருந்தோம்.
எனது கற்றது தமிழ், அங்காடித் தெரு படங்களின் வரிசையில் இந்த படம் நிச்சயம் இடம் பெறும். மம்முட்டி எல்லா டேக்கிலும் கரெக்டா நடிப்பார். நான் ஏதாவது சீனில் மாற்றி நடித்திருந்தால், அந்த சீன் படத்தில் வந்தால் நன்றாக இருக்காது. அதனால் எல்லா டேக்கிலும் நன்றாக நடிக்க வேண்டும் என முடிவு செய்து நடிப்பேன். என்றார்.
பேரன்பு ஷூட்டிங்கில் ஆளுமா டோலுமா VIDEO


