இந்திய சந்தை, யார் வசம்? தெருவோர மக்களுடையதா? கார்ப்பரேட் மால்களின் கைகளிலா?

Home > Visitor Columns
By
இந்திய சந்தை, யார் வசம்? தெருவோர மக்களுடையதா? கார்ப்பரேட் மால்களின் கைகளிலா?

Behindwoods.com isn't responsible for the views expressed by the visitor in this column. The visitor claims that this column is his/her own. If the column infringes any copyrights that you hold, please email us at columns@behindwoods.com.

Sensex, Share Broking, Wallmart, மற்றும் கண்ணை கூசும் பகட்டு கட்டிடங்களுக்குள் பல கடைகள்... சொன்ன விலை தான், பேரம் பேச முடியாது, தனக்கு வேண்டிய பொருட்களைத் தானே பொறுக்கிக் கொள்ள வேண்டும்... நாள் பட்ட காய்கறிகள், தேதி முடிந்த பால் - அறிய முடியாது, வாங்கிக் கொண்டு தான் வருவோம்!

விவசாயி கடனாளி, வியாபாரி கோடீசுவரன்! கொள்ளை லாபம். லாபத்தில் 2% பொது சேவைக்கு, CSR என்கிற Corporate Social Responsibility கிடையாது, வேலை செய்பவருக்கு உத்திரவாதம் சிடையாது, மாற்றுத்திறனாளிக்கு மறுவாழ்வு கிடையாது... லாபம் முழுவதும் ஒரு முதலாளிக்கு மட்டுமே. அதில் சில முதலாளிகள், சம்பந்தமே இல்லாத வெளிநாட்டுக்காரர்கள்.

மனிதநேயம், அன்பு, இனிய உரையாடல் எல்லாம், இந்த கார்ப்பரேட் மால்களில் missing. State, Central GST உண்டு, Debit Card, Credit Card, ஏற்கப்படும். வங்கிக் கடன் உண்டு, கடனைத் திருப்பிக் கட்டாமல் ஏமாற்றுதல், வெளிநாட்டிற்குத் தப்பித்து ஓடி, சுகமாக வாழ்தல் எல்லாம் நிறையவே உண்டு. இங்கே, 10% வேலை வாய்ப்பு 50% GDP, 20% மனிதவளம், அவ்வளவு தான்!

மேலும், ஆன்லைனில் வியாபரம், ஆளில்லாத பரிமாற்றம், ஒரு சிலரே மன்னர்கள், பல பேர் அடிமைகள்!

ஆனால் தெருவோர வியாபாரத்திற்கு, பெயரோ, Unorganized Sector, Marginalised Sector, Informal Sector படிப்பறிவில்லாதவன், படித்தும் படிக்காதவன், வேலை வெட்டி இல்லாதவன் வேறுதொழில் செய்யத் தெரியாதவன், இப்படி, இவர்கள் தொழில் தான் இந்தத் தெருவோர வியாபாரிகள்... 90% மக்களின் வாழ்வாதாரம் தெருவிலும் சந்தையிலும் தான். இட்லி தோசை, பலகாரக் கடைகள், பூக்கட்டி வியாபாரம்  - இவை பெண்கள் தொழில்.

பிளாட்பாரக் கடைகள், கொத்தனார், மேஸ்திரி, கட்டிட வேலை, புறம்போக்கு இடங்கள் மற்றும் ஆறு குளம், ஏரிக்கரைகளில் வீடு, செருப்பு தைத்தல், பஞ்சர் ஒட்டுதல், டைலர் வேலை, துப்புரவு வேலை, எலக்ட்ரிக்கல், பிளம்பிங், மெக்கானிக் வேலை, விவசாயிகள்... இப்படி அல்லல்படுபவர்கள் தெருவில் - ஆனால், பெரும் வியாபாரிகளோ மாளிகையில்!

பேரம் பேசலாம், வேலை வாய்ப்பைப் பெருக்கலாம், சங்கிலித் தொடர் போல ஒரு வியாபாரம், நூறுக்கு மேல் போய்ச் சேரும், தேவையில்லாத வரிகள் கிடையாது, லாபம் - நஷ்டம் உண்டு, இலவசம் உண்டு, ஏழை எளியவர்க்கு சலுகை உண்டு, மாற்றுத்திறனாளிக்கு மறுவாழ்வு உண்டு, வேலைக்கு வயது வரம்பு கிடையாது. ஆள் குறைப்பு கிடையாது, சம்பளம் கட் இல்லை, இப்படி தேவையில்லாத பல இல்லைகள்...

மேலும், கையிலே பணப் புழக்கம், 50% வங்கிகளில் கையிருப்பு, 90% வேலை வாய்ப்பு, 50% GDP, 100% மனிதவளம் - இதை நம்பி 80% இந்திய மக்கள்.

இந்தியாவை வாழ வைக்கப் போவது தெருவோரமா? கார்ப்பரேட்டா?

தேவை, தற்சார்பு பொருளாதாரமா? பெரும் முதலாளித்துவ உலகச் சந்தையா?

எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள், என்பது பெயரளவில் மட்டுமல்லாது, நடைமுறையிலும் வேண்டும், நிசசயம்  வேண்டும்!


C. Rajamanickam
rajamanickam.solagar@gmail.com
Want to publish your column too?
Please send your column to columns@behindwoods.com.

FACEBOOK COMMENTS

ABOUT THIS PAGE

This page has information about Analysis of business in corporates and small scale industries.