கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் லிஸ்ட்?? அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Mar 19, 2019 05:05 PM

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து நிற்கவிருப்பதாக முன்னதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெர்வித்திருந்தார்.

candidate list for lok sabha election 2019, Kamals MNM Tweet

இந்நிலையில் தமிழகத்தில் எல்லா கட்சிகளும் பரபரப்பாக கூட்டணி, தொகுதிப் பங்கீடு மற்றும் வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்து வரும் நிலையில், நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் பட்டியலை நாளை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

அதன்படி, வருகின்ற ஏப்ரம் 18, 2019-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கின்ற பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களின் பட்டியலை நாளை (20-03-2019, புதன் கிழமை) சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் வெளியிடப்படவுள்ளதாக அக்கட்சியின் சார்பில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேற்படி, வேட்பாளர் பட்டியல், நாளை மாலை 2 அளவில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நம்மவர் என்று அக்கட்சியினராலும் , ரசிகர்களாலும் அன்போடு அழைக்கப்படும் கமல்ஹாசன் வெளியிடவிருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை மக்கள் நீதி மய்யத்தின் அதிகாரப்பூர்வமான செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸின் பெயரில் அக்கட்சி வெளியிட்டுள்ளது.