மறுக்கப்பட்ட காதல்களை பேசும் பரபரப்பான WITNESS ஆவணப்படம்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Feb 14, 2019 05:53 PM

காதலர் தினத்தில் வெளியிடப்பட்ட வித்தியாசமான ஆவணப்படம் ஒன்று பலரது கவன ஈர்ப்பைப் பெற்றுள்ளது.

Al Jazeera channel releases Indias forbidden love documentary

உலகப் புகழ் பெற்ற கத்தாரைச் சேர்ந்த அல் ஜசிரா டிவி செய்தி சேனல், காதலர் தினத்தினை முன்னிட்டு இன்று இருவேறான நிஜ காதல் சம்பவங்களை தொகுத்து Witness என்கிற பெயரில் ஆவணப்படம் ஒன்றை தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்த ஆவணப்படமானது மத்திய கிழக்கு நாடுகளான இந்தியா, லெபனான், ஜப்பான், மெக்சிகோ, சைஃப்ரஸ், நார்வே, கோமோராஸ் உள்ளிட்ட நாடுகளில் இடம்பெற்ற நிஜ காதல் சம்பவங்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ஆவணப்படத்தில் எந்தவிதமான தங்குதடையுமின்றி ஒன்றிணைந்து வெற்றி பெற்ற காதல்களையும், ஜனநாயக உரிமை ஒடுக்கப்பட்டும் சமத்துவம் தகர்க்கப்பட்டும் காதலிக்க அனுமதி மறுக்கப்பட்டும் தோல்வி அடைந்த காதல்களையும் இணைத்து முரணாக உருவாக்கி இருக்கின்றனர். இதில் உடுமலைப்பேட்டை சங்கர், கவுசல்யாவின் காதல் கதையும் இந்த ஆவணப்படத்தில் தகவலாக இடம் பெற்றிருக்கிறது.

உடுமலைப் பேட்டையில் நிகழ்ந்த ஆணவப்படு கொலையால் தன் கணவன் சங்கரை பறிகொடுத்த கவுசல்யா தற்போது தப்பாட்ட இசைக்கலைஞர் சக்தி என்பவரை மறுமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. எனினும் கவுசல்யா, தன் கணவர் சங்கரின் நினைவாக சமூக நீதி அறக்கட்டளையை நிறுவியுள்ளார். இந்நிலையில் அல் ஜசீரா வெளியிட்ட இந்த ஆவணப்படத்தில் இந்தியாவின் மறுக்கப்பட்ட காதல் என்கிற தலைப்பில் சங்கர்-கவுசல்யாவின் காதல்கதை இடம்பெற்றிருப்பது பரவலாகி வருகிறது.

Tags : #INDIAS FORBIDDEN LOVE #DOCUMENTARY #VALENTINESDAY2019