‘முக்கிய 2 மாற்றங்கள்’.. தொடரைக் கைப்பற்ற போகும் அணி?.. பரபரப்பான கடைசி ஒருநாள் போட்டி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Mar 13, 2019 02:27 PM

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி பௌலிங்கில் இரண்டு மாற்றங்களை செய்துள்ளது.

IND vs AUS 5th ODI: India make two changes

இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 2 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முன்னதாக நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 டி20 போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி 2-0  என்ற கணக்கில் டி20 கோப்பையை இந்தியா நழுவவிட்டது.

இதற்கடுத்து நடந்த 4 ஒருநாள் போட்டிகளில் இரண்டு அணிகளும் இரண்டு வெற்றிகளுடன் 2-2 என்கிற கணக்கில் சமநிலையில் உள்ளன. இதனால் கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றி பெற வேண்டிய முனைப்பில் இரு அணிகளும் உள்ளன.

இதனை அடுத்து இன்று(13.03.2019) இரு அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

இந்நிலையில் இந்திய அணியில் கே.எல்.ராகுல், சாஹல் ஆகியோர் நீக்கப்பட்டு ஜடேஜா, முகமது ஷமி ஆகிய இரு பௌலர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து சொந்த மண்ணில் வெற்றி பெற வேண்டும் என்கிற முனைப்பில் இந்திய அணி விளையாடி வருகிறது.

Tags : #INDVAUS #TEAMINDIA #ODI #VIRATKOHLI #JADEJA #MOHAMMEDSHAMI