Trigger D Logo Top
Naane Varuven M Logo Top

சிம்பு நடித்து சமீபத்தில் வெளியாகி இருக்கும் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘மல்லிப்பூ’ பாடல் தற்போது ஹிட் ஆகியிருக்கிறது.

 

Mallipoo : ‘மல்லிப்பூ’-க்கு முன்னாடியே இவ்ளோ ஹிட் பாடல்களா? - இது மதுஸ்ரீ ப்ளே லிஸ்ட்..!
MALLIPOO : ‘மல்லிப்பூ’-க்கு முன்னாடியே இவ்ளோ ஹிட் பாடல்களா? - இது மதுஸ்ரீ ப்ளே லிஸ்ட்..!

சிம்பு நடித்து வெளியாகி இருக்கும் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘மல்லிப்பூ’ பாடல் தற்போது ஹிட் ஆகியிருக்கிறது. பரோட்டா கடை எனும் பெயரில் இயங்கும் கேங்ஸ்டர் கூடாரத்தில் சிம்புவுடன் தங்கியிருக்கும் ஒரு கேரக்டரின் மனைவி ஊரில் இருந்தபடி வாட்ஸ் ஆப் வீடியோ காலில் பாடும் பாடலாக மல்லிப்பூ பாடல் அமைந்திருக்கும். ஏ.ஆர் ரஹ்மான் இசையிலான இந்த பாடலை பாடகர் மதுஸ்ரீ பாடி இருக்கிறார்.

சோஷியல் மீடியாவில் இந்த ‘மல்லிப்பூ...’ vibe-தான் எங்கு பார்த்தாலும்  நிறைந்திருக்கிறது. இப்பாடலை பாடிய பாடகர் மதுஸ்ரீயின் முகம் தமிழ் சினிமா ரசிகர்கள் பலருக்கும் பரிச்சயமானதாக இருக்க வாய்ப்பில்லை. ஆனால், இவர் பாடிய பல சூப்பர் ஹிட் தமிழ்ப் பாடல்களை கேட்காத இளம் தமிழ் இசை ஆர்வலர்கள் இருக்க முடியாது எனும் அளவுக்கு அவ்வப்போது பல ஹிட் பாடல்களை மதுஸ்ரீ கொடுத்திருக்கிறார். அவை பற்றி இங்கு பார்ப்போம்.