ஹிப்-ஹாப் தமிழா ஆதியின் புதிய அறிவிப்பு
ஹிப்-ஹாப் தமிழா ஆதியின் புதிய அறிவிப்பு

ராப் பாடகராக, இன்டிபென்டெண்ட் மியூசிக் செய்துக் கொண்டிருந்த ஹிப்-ஹாப் தமிழா ஆதி தற்போது தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் இசையமைப்பாளராக திகழ்கிறார். இது தவிர ‘நட்பே துணை’, ‘மீசைய முறுக்கு’, ‘நான் சிரித்தால்’ உள்ளிட்ட படங்களில் ஹீரோவாகவும் அசத்தி வருகிறார்.

'Behindwoods Gold Mic Icon of Inspiration: இன்டிபென்டெண்ட் மியூசிக்’ என்ற விருதினை இயக்குநர் மோகன் ராஜாவிடம் இருந்து பெற்ற ஆதி, 'Underground Tribe' என்ற நிறுவனத்தை தொடங்குவதாக அறிவித்தார். இதன் மூலம் இன்டிபென்டெண்ட் மற்றும் அண்டர்கிரவுண்ட் ஆர்டிஸ்ட்களுக்கு வாய்ப்புகளை அமைத்துக் கொடுக்கும் பாலமாக இந்த 'Underground Tribe' நிறுவனம் செயல்படும் என்று அறிவித்தார்.