வின்னைதாண்டி வருவாயா
வின்னைதாண்டி வருவாயா

ஒரு காதல் கதையை அழகான க்ரீட்டிங் கார்டில் எழுதினால் அது தான் வின்னைதாண்டி வருவாயா. விடிவி வரும் போது அநேக தொன்னூறுகளின் பிள்ளைகள் யாவரும் பள்ளி படிப்பை முடித்துவிட்டனர். அப்படி இருந்த பசங்க பலரை, I want to became a film maker ப்பா, என சொல்ல வைத்தது வின்னைதாண்டி வருவாயா. அந்த காலத்துக்கு ஒரு அலைபாயுதே கார்த்திக்ன்னா, இந்த ட்ரென்டுக்கு விடிவி கார்த்திக் என பென்ச் மார்க் வைத்தது கௌதம் செய்த characterisation. தெரு தெருவாக அலைந்து திருந்து லவ் பண்ணி கொண்டிருந்த நமது பசங்களுக்கு வீட்டு மாடியிலே லவ்வர் இருந்தா எப்படி இருக்கும் என்ற ஏக்கத்தை கொண்டு வந்தார் கௌதம் மேனன். அதை அப்படியே நமக்கு ஃபீல் செய்ய வைத்தவர்கள் சிம்புவும் த்ரிஷாவும். இப்போது இருக்கும் பசங்களுக்கு சிம்புவின் க்யூட்நெஸ் என்னவென்று தெரியனும்னா விடிவி பார்த்தால் போதும். மனிதன் அத்தனை உணர்வுகளை அசால்டாக கையாண்டிருப்பார். அதற்கு போட்டி போட்டது த்ரிஷாவின் நடிப்பு. இன் பண்ண சட்டை, டீசன்ட்டான அப்பாச்சி பைக், காதலியுடன் சத்யம் தியேட்டர், நீலாங்கரை பீச் என விடிவி காட்டிய காதலை ரசித்து பார்த்து கொண்டாடினார்கள் 90-களில் பிறந்த பல கார்த்திக்குகளும் ஜெஸ்ஸிக்களும். அதற்கு ஏ.ஆர்.ரகுமான் போட்ட பாடல்கள் எல்லாம் க்ளாசிக்கின் உச்சம் என்றே சொல்லலாம். ஹொசான்னா கேட்டு துள்ளியவர்களும் மன்னிப்பாயா கேட்டு தலையனையை நனைத்தவர்களும் தான் அப்போது அதிகம். கார்த்திக்கின் மனது ஜெஸ்ஸி ஜெஸ்ஸி என சொல்லியது போலவே, நம்ம 90-ஸ் கிட்ஸிடம் கேட்டு பாருங்கள், லவ் படம்னா விடிவி, விடிவின்னு சொல்லும்.

இப்படி எல்லாம் தரமான லவ் படங்களை பார்த்து தாறுமாறா லவ் பண்ணிட்டு இருந்த 90-ஸ் தலைமுறைக்கு காதலர் தின வாழ்த்துக்கள்!

பிரேக்கிங் சினிமா செய்திகள், திரை விமர்சனம், பாடல் விமர்சனம், ஃபோட்டோ கேலரி, பாக்ஸ் ஆபிஸ் செய்திகள், ஸ்லைடு ஷோ, போன்ற பல்வேறு சுவாரஸியமான தகவல்களை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்