மின்னலே
மின்னலே

கவுதம் மேனனின் முதல் படம். அலைபாயுதே செட் செய்த லவ் ட்ரென்டில், வேறுவிதமாக ஃப்ரெஷாக வந்த படம் தான் மின்னலே. மின்னலே படத்தின் ஹைலைட்டே மாதவனின் குறும்பான நடிப்பும் ஹாரிஸின் இசையும் தான். மேடி என மாஸ் காட்டுவதிலும் சரி, ஆள் மாறாட்டம் செய்யும் காதலனாக முழிப்பதிலும் சரி, மாதவன் காட்டிய நடிப்புக்கு அப்போதிருந்த பெண்கள் எல்லாம் அடிமைகளானார்கள். காதலியுடன் நெருக்கத்திலேயே வாழும் ஹீரோக்கள் எனும் கவுதமின் ஆல் டைம் லவ் டச்சுக்கு முதல் சுழி போட்டது மின்னலே படம் தான். மழையில் ஆடும் ரீமாசென்னை ஃபோன் பூத்தில் இருந்து ரசிக்கும் மாதவனாய், மின்னலேவை ரசித்தார்கள் அப்போதிருந்த இளசுகள். பக்கவாக செதுக்கப்பட்ட நாகேஷ் கதாபாத்திரம், நச்சென்று வரும் விவேக் காமெடிகள், அழகான காதல் காட்சிகள் என மின்னலே சலிப்புதட்டாத லவ்வர்ஸ் டிலைட். இப்படிப்பட்ட மின்னலேவின் பாடல்கள் இன்று வெளியாகி இருந்தால், எல்லாம் மில்லியன் வியூவ்ஸ் அடித்திருக்கும். அந்தளவுக்கு முதல் படத்திலேயே யூத்தான பாடல்களை கொடுத்தார் ஹாரிஸ் ஜெயராஜ். இரு விழி உனது, வின்மதியே நில்லு, வசீகரா, மேடி தீம் என ஹாரிஸ் கொடுத்தது காதலின் வெரைட்டி விருந்து. அது தான் மின்னலேவை 90-ஸ் மியூசிக்கல் மெமரியாக மாற்றியது என்றே கூறலாம்.