மாத்தி மாத்தி பேசல.. மாற்றத்துக்காக பேசறேன் - பாலாபிஷேகம் குறித்து சிம்பு விளக்கம்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படம் வருகிற பிப்ரவரி 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் நடிகர் சிம்பு என பட வெளியீட்டின் போது அண்டா அண்டாவா பால் ஊத்துங்க என பேசி வெளியிட்ட வீடியோ வைரலானது.

Simbu clarifies his statement about Milk Abishekam

இதற்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. இந்நிலையில் இதுகுறித்து சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களை  சந்தித்த அவர் இதுகுறித்து பேசியதாவது,

என்னுடைய ரசிகர் ஒருவர் பிளக்ஸ் பிரச்னையால் இறந்துவிட்டார். அவர் எப்பொழுதுமே பால் அபிஷேகம் பண்ணுவார். நான் அவர கூப்டு திட்டுவேன் அப்படி பண்ணாதடானு. என் மேல உள்ள அன்புல அவன் தொடர்ந்து பண்ணுவான்.

ஆனா ஒரு உயிர் போனதுக்கு அப்றம் நான் சொல்லிருந்தேன். எனக்கு பிளக்ஸ், பேனர்லாம் வேணாம்.  அப்டி ஒன்னும் மாஸ் காட்ட வேணாம்னு தோணுச்சு எனக்கு.

அத நான் மக்கள் கிட்ட சொன்னேன். அது சரியா போய் சேரல. ஒரு படம் ரிலீஸ் அப்போ தான் கட் அவுட் பேனர் பத்தி பேசுவாங்க. அந்த நேரத்துல தான் இத பத்தி பேசனும்னு நினச்சேன்.

கட் அவுட் பேனர்லாம் வேணாம். உங்க அப்பா அம்மாவுக்கு டிரெஸ் எடுத்துக் கொடுங்க என்று சொல்லியிருந்தேன். அதுவும் போய் சேரல. அதுனால தான் பேனர் வைங்க, கட் அவுட் வைங்க . அண்டால பால் ஊத்துங்கனு சொல்லியிருந்தேன்.

ஆனா அது பயங்கராம போய் சேர்ந்துருச்சு. அந்த வீடியோவ நல்லா பாருங்க. பாக்கெட்ல வேணாம். அண்டால ஊத்துங்கனு சொன்னேன். ஆனா என்னோட கட்அவுட்டுக்கு ஊத்துங்கனு சொல்லல . நான் மாத்தி மாத்தி பேசல.. எல்லோரையும் மாத்தனுங்கிறதுக்காக தான் பேசறேன்.

ஒருவேள நான் சொன்ன விதம் தவறா இருந்துருந்தா அதுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்.  இப்பவும் சொல்றேன். அண்டாவா பால் ஊத்துங்க. பேசவே முடியாத கட் அவுட்டுக்கு ஊத்துரதுக்கு பதிலா வாயுள்ள ஜீவனுக்கு ஊத்துங்க கஷ்டப்படுறவங்களுக்கு ஊத்துங்க என்றார்.

வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்னு வள்ளலார் சொன்னத மறக்குறவன் இல்ல நான். என்றார். 

மாத்தி மாத்தி பேசல.. மாற்றத்துக்காக பேசறேன் - பாலாபிஷேகம் குறித்து சிம்பு விளக்கம் VIDEO