Petta USA All Banner

வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் சிம்புவுக்கு ஜோடி இவர் தான்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Raashi Khanna to act STR's Maanadu directed by Venkat prabhu

தற்போது சிம்பு இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தில் நடித்துவருகிறார். பேமிலி டிராமாவாக உருவாகியுள்ள இந்த படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

 

பின்னர் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சிம்பு தற்போது இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்கவுள்ளார். அரசியல் பின்னணியில் உருவாக உள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியானது.

 

இந்நிலையில் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கவுள்ளார். மேலும் இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.

 

நீண்ட இடைவேளைக்கு பிறகு சிம்பு - யுவன் கூட்டணி இணைந்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.