சின்ன வீட்டுக்கு மெயின்டனன்ஸ் எப்பவுமே கொஞ்சம் கஷ்டம் - பார்த்திபன் நக்கல்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் மைக்ரோபிளக்ஸ் நிறுனம் தமிழ் திரைப்படங்களுக்கு டிஜிட்டல் மாஸ்டரிங் தொழில்நுட்பத்தை தொடங்கி வைக்கப்பட்டது. கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள அதே கட்டிடத்தில் 5000 சதுரடிக் கொண்ட தயாரிப்பாளர் சங்கத்தின் கிளை அலுவலகமும் தொடங்கப்பட்டது.

Parthiban funny speech at TFPC branch inauguration office

தயாரிப்பாளர் ஜே.சதிஷ்குமார் இளையராஜா நிகழ்ச்சிக்குத் தடைக் கேட்டு வழக்கு தொடுத்தது குறித்து விஷால் பேசுகையில்,  நீதிபதிகளை தெய்வமாக மதிக்கிறோம். இந்த வழக்குகள் எல்லாம் நல்லபடியா முடியும். 1000 படங்களுக்கு மேல் இசையமைத்த இளையராஜா என்ற இசைமேதையை கொண்டாடும் நிகழ்ச்சி இது.

ஜே.சதிஷ்குமார் எங்கள் சங்க உறுப்பினர். எந்த விஷயமாக இருந்தாலும் அவரே நேரடியாக கேட்டிருந்தா சொல்லிருப்போம். அந்த வழக்கு போட்ட செலவுல இளையராஜா 75 ஷோவுக்கு டிக்கெட் வாங்கி பாத்துருக்கலாம் இந்த 'மைக்ரோப்ளக்ஸ்' வசதி 'ஐடி'  நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் தான் அமைந்திருக்கும். ஆனால், முதன்முறையாக தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு அதற்கான அலுவலகம் அமைந்திருக்கிறது. முக்கியமாகஇலவசமாக கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி.

அதற்காக 'மைக்ரோப்ளக்ஸ்' ஆல்பர்ட்-க்கு நன்றி இதுபற்றி ஒரு நாள் பேசிக்கொண்டிருந்தேன். முதன்மை அலுவலகம் இருக்கிறது. அதேபோல் தி.நகரிலும் அலுவலகம் இருக்கிறது. ஆனால், இந்த இடம் சிறு தயாரிப்பாளர்களுக்கு உதவிகரமாக இருக்கும்.  பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு, படத்தின் பிரத்யேக காட்சிகள் மற்றும் இசை வெளியீட்டு விழா ஆகியவற்றிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த அலுவலகத்திற்கு வாடகை கிடையாது.

தமிழ் திரையுலகத்திற்கு  மிகப்பெரிய நிறுவனமான மைக்ரோப்ளக்ஸ்-ன் ரஞ்சித்தை வரவேற்கிறேன். அதேபோன்று, 'ப்ரைம் போக்கஸ்' உடன் இணைவதிலும் மகிழ்ச்சி. ஏனென்றால், தயாரிப்பாளர்களாகிய நாங்கள் பல வருடங்களாக எங்களுக்கு சம்பந்தமே இல்லாத ப்ரொஜெக்டருக்கு செலவழித்து வருகிறோம்என்றார்.

மைக்ரோபிலிஸ் ஆல்பர்ட் பேசும்போது,

தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு ஒரு மாஸ்டர் யூனிட் வேண்டும் என் விஷால் என்னிடம் பல கேட்டார். இதனால் சிறு பட தயாரிப்பாளர்கள் பயனடைவார்கள் என்றார். ரூபாய் 2 லட்சம் செலவழித்து சங்கத்தை வளர்க்க அவர் எடுக்கும் முயற்சியை புரிந்துகொண்டு இந்த வசதியை செய்து தர ஒப்புக்கொண்டேன். பராமரிப்பு செலவைத் தவிர மற்றவைக்கு கட்டணம் கிடையாது.  அதேபோல், 7 கோடிக்கு கணக்கையும் சமர்ப்பித்து, அடுத்த தேர்தலிலும் வெற்றி பெறுவார்.என்றார்

பின்னர், விழாவில் பேசிய நடிகர் பார்த்திபன், பிலிம் சாம்பர்ல எங்களுக்குனு ஒரு ஆபிஸ் இயங்குனா கூட, இது எங்களுக்கு ஒரு சின்ன வீடு மாதிரி இன்டர்ஸ்டிங்கான இடமாக இருக்கும்னு நினைக்குறேன். சின்ன வீடு மெயின்டனன்ஸ் எப்பவுமே கொஞ்சம் கஷ்டம். இந்த சின்ன வீட்ல கரண்டுக்கும், மெயின்டனன்ஸ்க்கும் பணம் குடுத்தா போதும். அப்புறம் இப்படி அழகான இடம்.

இதெல்லாம் திரு.விஷால் அவர்களின் நட்பால் சாதிக்கிற விஷயம். எனக்கு எப்பவுமே நல்லது செய்யனும். நல்லது செய்யிறதுக்கு துணையா இருக்கனும். அப்படி துணையா தான் இருக்குறேன்.

ஒரு மனுஷனுக்கு கல்யாணம் மிகப்பெரிய விஷயம்.  கல்யாணத்த விட விஷால் பெரியதாக அவர் நினைக்குறது, அவர் தலைவராக இருந்த இந்த காலக்கட்டத்துல தயாரிப்பாளர் சங்கத்துக்கு எதாவது சிறப்பா செஞ்சிரனும்ற அவரது விருப்பம். அதுல ஒரு பிரசண்ட் கூட ஊழல் இல்ல.என்றார்.