‘தல 59’ மாஸ் அப்டேட்: அஜித்தின் அடுத்தப்படம் ரிலீஸ் எப்போ தெரியுமா?

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகவிருக்கும் ‘தல 59’ திரைப்படம் ரிலீஸ் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Massive announcement on Release of Ajith's Thala 59

அஜித்-நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘விஸ்வாசம்’ திரைப்படம் வசூல் மற்றும் விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதையடுத்து பாலிவுட்டில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான ‘பிங்க்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்கில் அஜித் நடிக்கவிருக்கிறார்.

‘தல 59’ என தற்காலிகமாக அழைக்கப்படும் இப்படத்தை ‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, படங்களை இயக்கிய ஹெச்.வினோத் இயக்குகிறார். இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடிக்கவிருக்கிறார்.

மேலும், இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ரங்கராஜ் பாண்டே, ஆண்ட்ரியா தாரியங், அர்ஜுன் சிதம்பரம், ஆதிக் ரவிச்சந்தர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தை 2019ம் ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கும் அடுத்த திரைப்படத்தையும் போனி கபூரே தயாரிக்கவிருக்கிறார். ‘தல 60’திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் 2019ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் தொடங்கும் என்றும், அந்த திரைப்படம் 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரிலீஸாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜித் நடிக்கவிருக்கும் அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்த அறிவிப்பு அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.