Petta USA All Banner

உலக அளவில் இந்தச் சாதனையை படைத்த ஒரே தமிழ் பாடல் தனுஷின் ரௌடி பேபி

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

தனுஷ் - சாய் பல்லவி ஆகியோர் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான படம் மாரி 2.

Dhanush's Rowdy Baby song got top 4 position in Billiboard magazine

இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்த படம் மூலம் நீண்ட இடைவேளைக்கு பிறகு யுவன் ஷங்கர் ராஜா - தனுஷ் இணைந்திருந்தனர். இதனால் படத்தின் பாடல்கள் மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்நிலையில் இந்த படத்தில் இருந்து வெளியான ரௌடி பேபி பாடல் மிகுந்த வரவேற்பை பெற்றது. யூடியூபில் இந்த பாடல் அதுவரை வெளியான பாடல்களின் சாதனைகளையெல்லாம் முறியடித்தது.

இசை குறித்து வெளியாகும் பில்லிபோர்ட் என்ற அமெரிக்க இதழ் உலக அளவில் டாப் 25 பாடல்கள் என்ற பட்டியலை வெளியிட்டது. அதில் ரௌடி பேபி பாடல் 4 வது இடத்தை பெற்றுள்ளது.

இந்தச் சாதனையை நிகழ்த்திய முதல் தமிழ் பாடல்  இது தான்.