Petta USA All Banner

ஸ்ரீதேவியின் மரணத்தை நியாபகப்படுத்தும் காட்சி : பிரியா வாரியர் படத்துக்கு சிக்கல்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

தனது நடிப்பால் இந்திய அளவில் புகழ் பெற்றவர் நடிகை ஸ்ரீதேவி . ஹிந்தி சினிமாவின் முதல் லேடி சூப்பர் ஸ்டார் எனவும் புகழ்பெற்றவர்.

Boney Kapoor gives legal notice to Sridevi Bungalow director

இந்நிலையில் கடந்த வருடம் துபாயில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்த ஸ்ரீதேவி, குளியளறை தொட்டியில் இறந்துகிடந்தார். இவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக செய்திகள் பரப்பப்பட்டன.

தற்போது ஸ்ரீதேவி பங்களா என்ற படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் டிரெய்லரில் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் ஸ்ரீதேவி என்ற நடிகை வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த டிரெய்லரின் இறுதியில் குளியலறை தொட்டியில் அவர் இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

இது நடிகை ஸ்ரீதேவியின் மரணத்தை மறைமுகமாக பிரதிபலிப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவியின் கணவரும் பிரபல தயாரிப்பாளருமான போனி கபூர் அந்த படத்தின் இயக்குநருக்கு சட்டப்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

ஸ்ரீதேவியின் மரணத்தை நியாபகப்படுத்தும் காட்சி : பிரியா வாரியர் படத்துக்கு சிக்கல் VIDEO