இப்போ வர்ற எல்லா படத்துக்கும் இளையராஜாதான் மியூசிக் டைரக்டர்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

கே.இ ஞானவேல் ராஜா  தனது  ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தின் சார்பில்  சரவண ராஜேந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் மெஹந்தி சர்க்கஸ்.   மாதம்பட்டி ரங்கராஜ், ஸ்வேதா திருப்பதி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த  படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள சத்யம் தியேட்டரில் நடைபெற்றது.

Bhagyaraj praised Ilaiyaraaja in Mehandi circus audio launch function

இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.இந்த இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் சிவகுமார், இயக்குநர் பாக்யராஜ் ஆகியோர் தலைமை ஏற்க இவர்களுடன் ஞானவேல் ராஜாவின் தந்தை ஈஸ்வரன், இயக்குநர் மாரி செல்வராஜ், லெனின் பாரதி, சிம்பு தேவன், எச். வினோத், நலன் குமாரசாமி, சிறுத்தை சிவா, மௌனகுரு சாந்தகுமார், எழில், கரு.பழனியப்பன், எஸ்.ஆர்.பிரபு, 2D ராஜசேகர், பாடகர் விஜய் யேசுதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய பாக்யராஜ், எனக்கு இங்கே வரும் வரை சரவணனைப் பற்றி எதுவும் தெரியாது. ஆனால் இந்தப் படத்தின் கலை நேர்த்தி, முன்னோட்டம், இசை என எல்லாம் இவர் எப்பேர்பட்ட கலைஞன் என்பதைக் காட்டுகிறது.

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருகிறார் என்பது நன்றாக தெரிகிறது.

ராஜூமுருகனின் குக்கூவைப் போல இதிலும் இளையராஜாவின் இசை ஒரு தனி கதாப்பாத்திரமாக இருக்குமோ என்றே தோன்றுகிறது.

அப்படியென்றால், இந்தப் படத்துக்கு ஷான் ரோல்டனோடு சேர்த்து இளையராஜாவும் ஓர் இசையமைப்பாளர் தான். இந்தப் படம் மட்டுமல்ல, இன்று வரும் அத்தனை படங்களிலும் அவர் இருக்கிறார் என்பதே உண்மை. எல்லாப் படங்களுக்கும் அவரும் ஒரு இசையமைப்பாளர் தான் என்றார்.