திரைத்துறையில் இயக்குநர்கள் பலரும் நடிக்க வந்துவிட்டனர். இவர்களுள் பல இயக்குநர்கள் தங்கள் படங்களில் தாங்களே நடித்து இயக்குகின்றனர்.

இன்னும் பல இயக்குநர்கள் பிற இயக்குநர்களின் திரைப்படங்களில் நடித்து வருகின்றனர். பொதுவாகவே நடிகர்கள் ஹீரோவாக நடிக்கும்போது போலீஸ் ஸ்டோரில் நடிக்கும் கதைகளில் ஆர்வமாக இருப்பதை காண முடியும்.

எனினும் பிற இயக்குநர்களின் திரைப்படங்களில் ஹீரோவாகவோ, அல்லது முக்கிய கதாபாத்திரங்களிலோ நடிக்கும் முன்னணி இயக்குநர்கள் சிலர் போலீஸாகவும் சமீபத்திய படங்களில் நடித்துள்ளனர். அப்படியானதொரு ஒரு சுவாரஸ்ய பட்டியலை இங்கு காண்போம்.

சரவண சுப்பையா
சரவண சுப்பையா

இயக்குநர் சரவண சுப்பையா, அஜீத் குமார் நடிப்பில் சிட்டிசன் திரைப்படத்தை இயக்கியவர்.

கடந்த 2001-ஆம் ஆண்டு அஜீத்குமார், வசுந்துரா தாஸ், நக்மா மற்றும் பலர் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் அத்திப்பட்டி எனும் கிராமமே சில அதிகார துஷ்பிரயோக வில்லன்களால் காணாமல் போனது குறித்தும், அதற்காக பழிவாங்கும் நாயகன் குறித்தும் பேசுகிறது. இறுதியில் ஒரு மெசேஜூம் சொல்வதாய் அமைந்துள்ளது. இவர் வெற்றிமாறனின் விசாரணை திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

இயக்குநர் சரவண சுப்பையா தற்போது மீண்டும் என்கிற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் அண்மையில் வெளியானது.