சமுத்திரகனி
சமுத்திரகனி

பிரபல இயக்குநர் சமுத்திரகனி நாடோடிகள், நிமிர்ந்து நில், போராளி, அப்பா உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர். அண்மையில் வெளியான விநோதய சித்தம் திரைப்படத்திலும் சமுத்திரகனி இயக்கி நடித்துருந்தார். இவர் வெற்றிமாறனின் விசாரணை திரைப்படத்திலும், அண்மையில் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ஃபிராங்க்ளின் ஜேக்கோப் இயக்கி வெளிவந்த ரைட்டர் திரைப்படத்திலும் போலீஸாக நடித்துள்ளார். இந்த படங்கள் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றன.