தமிழ் சினிமாவில் வில்லன்களுக்கென்று எப்போதும் தனி இடம் உண்டு. ஒரு காலத்தில் வெறுப்பையும் வசைகளையும் மட்டுமே சம்பாதித்து வந்த அவர்கள் இப்போது ஆடியன்சுக்கு ரோல் மாடலாகவும் மாறி விட்டனர்.

 

ஆனால், வில்லன்களை ஆடியன்ஸ் தொடர்ந்து வில்லனாகவே எதிர்பார்ப்பதால் அவர்களின் இயங்குதளம் ஒரு குறுகிய வட்டமாக சுருங்கி விடுகிறது. ஆனால், அதையும் மீறி தங்களை மற்ற பாத்திரங்களிலும் சிறப்பாக நடிக்க முடியும் என்று நிரூபித்த வில்லன்களை பட்டியலிடுகிறது இந்த ஸ்லைட் ஷோ.

 

(இந்த பட்டியலில் யாராவது விடுபட்டிருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்)

ரகுவரன்
ரகுவரன்

மீசை மரு, முறுக்கான உடல்வாகு இருந்தால் தான் வில்லன் என்றிருந்த தமிழ் சினிமா வில்லன் ஸ்டீரியோடைப்பை அடித்து நொறுக்கிய பெருமை எப்போதும் ரகுவரனைச் சாரும்.

 

பாஷா, புரியாத புதிர் (1990) என்ற பல்வேறு படங்களில் வில்லனாக ஒரு ரவுண்டு வந்தாலும் அதற்கு முன் அவர் நடித்த 'சம்சாரம் அது மின்சாரம்' போன்ற படங்களின் குணச்சித்திர வேடங்களும் பேசப்பட்டன. ஆனால் அவை அனைத்திலும் இருந்து வேறுபட்டு ’யாரடி நீ மோகினி’ படத்தில் ஒரு யதார்த்தமான தந்தை கதாப்பாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருப்பார் ரகுவரன்.