விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சி இதுவரை 2 சீசன்களாக நடைபெற்று முடிந்துள்ளது. பெருவாரியான மக்களால் விரும்பிப் பார்க்கப்பட்டு வந்த இந்த நிகழ்ச்சியின் அடுத்த சீசன் எப்போது வரும்? இதில் கலந்துகொள்ளப் போகும் போட்டியாளர்கள் யார்? என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தனர்.

குக் வித் கோமாளி 3வது சீசன் புதிய ப்ரோமோ
குக் வித் கோமாளி 3வது சீசன் புதிய ப்ரோமோ

தற்போதுதான் விஜய் டிவியின் முக்கியமான ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 3வது சீசனுக்கான ப்ரோமோ அடுத்தடுத்து வெளியாகியுள்ளது. இதில் முந்தைய சீசன் போட்டியாளர்கள் யார் கலந்துகொள்ள போகிறார்கள்? புது போட்டியாளர்கள் யார்? என பல கேள்விகள் ரசிகர்களிடத்திலே எழுந்தன. அவற்றுக்கெல்லாம் தற்போது விடை கிடைத்துவிட்டது. ஆம், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 3வது சீசனில் கலந்துகொள்ள போகிற போட்டியாளர்களைப் பற்றிய விபரங்களை இங்கு காணலாம்.