ஓ காதல் கண்மணி (2015)
ஓ காதல் கண்மணி (2015)

ஓ காதல் கண்மணி, திரைப்பட இயக்குநர் மணிரத்னம் இயக்கி ஏப்ரல் 17, 2015 அன்று வெளியான தமிழ் காதல் திரைப்படம் ஆகும்.இதனை அவரது நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்துள்ளது. இதில் முதன்மை வேடங்களில் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மானும், நித்தியா மேனனும் நடித்துள்ளனர்.இத்திரைப்படம் தற்கால இந்தியச் சூழலில் மணமுடிக்காது உடனுறைந்து வாழும் இளைய இணையரைக் குறித்ததாகும். இத்திரைப்படத்திற்குப் பின்னணி இசையமைத்திருப்பவர் ஏ. ஆர். ரகுமான் ஆவார்