பிரபல திரையரங்கின் உரிமையாளர் மரணம்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

சென்னையில் உள்ல பிரபல திரையரங்கமான வெற்றி தியேட்டரின் உரிமையாளர் கிருஷ்ணன் உயிரிழந்தார்.

Vettri Theatre Propreitor R.Krishnan passed away

சென்னையில் கடந்த 10 ஆண்டுகளில் மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் அதிகரித்துள்ள நிலையிலும், ரசிகர்களின் விருப்பமான திரையரங்குகளில் வெற்றி திரையரங்கும் ஒன்று.

குரோம்பேட்டையில் அமைந்துள்ள வெற்றி திரையரங்கின் உரிமையாளர் கிருஷ்ணன் உடலநலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவு வெற்றி திரையரங்க குடும்பத்தினரை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘2.o’ திரைப்படம் வெற்றி திரையரங்கின் வரலாற்றிலேயே அதிக வசூலை வாரிக் குவித்தது. அதேபோல், சமீபத்தில் பொங்கல் பண்டிகைக்கு அஜித் நடிப்பில் வெளியான ‘விஸ்வாசம்’ திரைப்படம் வெற்ரி திரையரங்கில் அதிக வசூலை குவித்தது குறிப்பிடத்தக்கது.