Petta USA All Banner

தெலுங்கில் அறிமுகமாகும் வரலக்ஷ்மி

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

நடிகர் சரத்குமார் மகளான வரலக்ஷ்மி போடா போடி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.  பின்னர் பாலாவின் தார தப்பட்டையில் தனது நடிப்பால் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தார்.

Varalakshmi to act first telugu film with Sundeep kishan and Hanshika

மேலும் அந்த படத்தில் நடித்ததற்காக பல்வேறு தரப்பினரின் பாராட்டுக்களை பெற்றுவருகிறார். பின்னர் தனக்கென முக்கியத்துவமுள்ள கதைகளை தேர்வு செய்து நடித்துவருகிறார்.

சமீபத்தில் சண்டக்கோழி 2 மற்றும் சர்கார் ஆகிய படங்களில் தனது  வில்லத்தனத்தால் மிரட்டினார்.  இந்நிலையில் தற்போது டிவிட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஓன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தெலுங்கில் முதன் முதலாக நடிக்க இருக்கும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். சந்தீப் கிஷன் மற்றும் ஹன்சிகா ஆகியோருடன் இணைந்து தெனாலி ராமகிருஷ்ணா பிஏபிஎல் என்ற படத்தில் நடிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

நாகேஷ்வர ரெட்டி இயக்கும் இந்த படத்துக்கு சேகர் சந்திரா இசையமைக்கிறாா்.