யோகிபாபு நடிக்கும் 'கூர்கா' படத்தில் இருந்து வெளியான சுவாரஸியத் தகவல்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

யோகிபாபு முதன்மை வேடத்தில் நடித்துவரும் படம் கூர்கா. மேலும் அவருடன் கனடா நாட்டைச் சேர்ந்த மாடல் எலிசா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

The shooting of Sam Anton's Gurkha, starring YogiBabu, has been wrapped up

இந்த படத்தை டார்லிங் பட இயக்குநர் சாம் ஆண்டன் இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்ய ராஜ் ஆர்யன் இசையமைக்கிறார்.

இந்த படத்தை ஃபோர் மங்கிஸ் என்ற நிறுவனம் சார்பாக சாம் ஆண்டன் தனது நண்பர்களுடன் இணைந்து தயாரித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவைடைந்துள்ளன. இதுகுறித்து அந்த  படத்தின் இயக்குநர் ஷாம் ஆண்டன் தெரிவித்ததாவது,

இந்த படத்தின் படப்பிடிப்பின் போது உதவிகரமாக இருந்த அனைத்து குழு உறுப்பினர்களுக்கும் நன்றி. குறிப்பாக உதவி இயக்குநர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இந்த படத்தில் யோகிபாபு, மற்றும் கனடா மாடல் எலிசா ஆகியோர் தங்களது சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார்கள். தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறோம். என்றார்.