செல்ஃபி கேட்கும் ரசிகர்களுக்கு தல அஜித்தின் ரியாக்ஷன்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

'விஸ்வாசம்' படத்தின் வெற்றிக்கு பிறகு தல அஜித் தற்போது மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடித்த 'பிங்க்' படத்தின் ரீமேக்கான இதனை 'சதுரங்கவேட்டை', 'தீரன் அதிகாரம் ஒன்று' படங்களின் இயக்குநர் வினோத் இயக்கவுள்ளார்.

Thala Ajith's reaction on fans selfie request

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தில் வித்யாபாலன் ஸ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில் அஜித் துப்பாக்கி பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அதில் ரசிகர் ஒருவர் தல ஒரே ஒரு செல்ஃபி தல என கேட்கிறார். பின்னர் தான் காலையிலிருந்து காத்திருப்பதாகவும் தெரிவிக்கிறார். அதற்கு அஜித் அந்த ரசிகரை பார்த்து கையெடுத்து கும்பிடுகிறார். பின்னர் அந்த ரசிகர் மீண்டும் மீண்டு கெஞ்சுவதை பார்த்து மீண்டும் கும்பிடுகிறார்.

அப்போது அங்கிருக்கும் ஒருவர் வந்து தயவு செஞ்சு கெளம்புங்க, நீங்க இவ்ளோ கூட்டம் சேர்ந்திங்கனா அவர் என்ன பண்ணுவாரு . அவர கொஞ்சம் பிராக்டிஸ் பண்ண விடுங்க என்கிறார்.

செல்ஃபி கேட்கும் ரசிகர்களுக்கு தல அஜித்தின் ரியாக்ஷன் VIDEO