சிங்கமும், சிறுத்தையும் இணையும் காதலர் தின கொண்டாட்டம்- ரசிகர்கள் ஆர்வம்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

காதலர் தினத்தை முன்னிட்டு சூர்யா நடித்துள்ள ‘என்.ஜி.கே’ திரைப்படத்தின் டீசரும், கார்த்தி நடித்துள்ள ‘தேவ்’ திரைப்படமும் ரிலீசாகவுள்ளது.

Suriya's NGK Teaser will be screened along with Karthi's Dev in theatres

இந்நிலையில், காதலர் தின ஸ்பெஷல் ட்ரீட்டாக சூர்யா-கார்த்தி ரசிகர்களுக்கு பெரிய சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்தி-ரகுல் ப்ரீத் சிங் இணைந்து நடித்துள்ள ‘தேவ்’ திரைப்படம் வரும் பிப்.14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

‘தேவ்’ திரைப்படத்துடன், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் செல்வராகவன் இயக்கியுள்ள சூர்யா-ரகுல் ப்ரீத்-சாய் பல்லவி இணைந்து நடித்துள்ள ‘என்.ஜி.கே’ டீசரும் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சூர்யா மற்றும் கார்த்தி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சூர்யா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் காத்திருக்கும் ‘என்.ஜி.கே’ டீசர் அதிகாரப்பூர்வமாக பிப்.14ம் தேதி மாலை 6 மணிக்கு யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தள பக்கங்களில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.