மகள் திருமணத்திற்கு வாழ்த்துக் கூறிய அனைவருக்கும் நன்றி - ரஜினிகாந்த்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மகள் சவுந்தர்யா-விசாகன் திருமணத்திற்கு நேரில் வந்து வாழ்த்து தெரிவித்த முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் திரையுலக பிரபலங்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.

Super Star Rajinikanth thanks everybody for gracing his daughter's Wedding

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் விசாகன் வணங்காமுடியின் திருமணம் நேற்று (பிப்.11) காலை சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.

நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் சில பிரமுகர்கள் மட்டுமே கலந்துக் கொண்டனர். இந்நிலையில், திருமணத்திற்கு நேரில் வந்து மணமக்களை வாழ்த்திய அனைவருக்கும் நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்து கடிதம் வெளியிட்டுள்ளார். 

அவரது கடிதத்தில், என் மகள் சவுந்தர்யா, மணமகன் விசாகன் திருமணத்திற்கு வருகை தந்து வாழ்த்திய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் பெரு மக்கள், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முகேஷ் அம்பானி குடும்பத்தினர், திருநாவுக்கரசர், அமர்நாத், கமல்ஹாசன் மற்றும் நண்பர்கள், உறவினர்கள், திரையுலக பிரமுகர்கள், ஊடக நண்பர்கள், காவல் துறை நண்பர்கள் என அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.