ஹைவேஸில் ரியல் ஆக்‌ஷன் சீன் - துப்பாக்கி முனையில் ஹீரோவை சுற்றி வளைத்த கமாண்டோ படை

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

நடிகர் தினேஷ் நடித்து வரும் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ திரைப்படத்தின் ஷூட்டிங்கின் போது, அவரை கமாண்டோ படையினர் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Special Commando team round up actor Dinesh while shooting stunt scene for 'Irandaam Ulaga Porin Kadaisi Gundu'

இயக்குநர் பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில் ‘அட்டக்கத்தி’ தினேஷ், ரித்விகா, ஆனந்தி, ராம்தாஸ், லிங்கேஷ், ஜான்விஜய், ஜானிஹரி, வினோத் உள்ளிட்டோர் நடித்து வரும் இப்படத்தை பா.ரஞ்சித் தயாரித்து வருகிறார்.

கிஷோர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளை இயக்குநர் அதியன், தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரத்தில் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது ஓடும் லாரியில் நடிகர் தினேஷ் தொங்கிக் கொண்டு செல்வது போன்ற காட்சிகளை லாரிக்குள் கேமரா வைத்து படமாக்கிக் கொண்டிருந்தனர்.

கேமரா லாரிக்குள் இருந்ததால் வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு இது நிஜமான ஸ்டண்ட் காட்சி போன்று தோன்றியது. இந்நிலையில், அந்த வழியே வந்த  ஸ்பெஷல் கமாண்டோ படை வீரர்கள் நிஜமாகவே ஹைவேஸில் இரவு நேரங்களில் செல்லும் லாரிகளில் ஏதோ நடக்கிறது என்ற சந்தேகத்தில் லாரியை சுத்தி வளைத்துப் பிடித்தனர்.

இதை அறியாத ஹீரோ, நமக்கு தெரியாமல் இது என்ன புதுசா கமாண்டோ வீரர்கள் எல்லாம் சீன்ல வராங்களே' இது சீன்லயே இல்லியே என்று அதிர்ச்சியடையாமல் சுற்றி வளைத்த போலீசார் வைத்திருந்த துப்பாக்கிகளை பார்த்து இது என்ன ஒரிஜினல் மாதிரியே இருக்கு ? என்று கேட்க .... நிஜ போலீசார் துப்பாக்கியை தினேஷ் மீது குறிவைத்துள்ளனர்.

இயக்குனர் சூட்டிங், சூட்டிங், என்று சத்தம்போட அதன் பிறகே தினேஷ் அதிர்சியடைந்துள்ளார். நெருங்கி வந்த வீரர்கள் தினேஷ் முகத்தை கவனித்த பின், இது நிஜமான சூட்டிங் என்பதை உறுதிபடுத்தியுள்ளனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.

பின்னர், பார்ப்பதற்கு நிஜமாகவே இருக்கிறது என்று நடிகர் தினேஷை பாராட்டிச் சென்றுள்ளனர். செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இப்படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.