சூப்பர் ஸ்டாரின் மகள் சவுந்தர்யாவை கரம் பிடித்த விசாகன்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கும், தொழிலதிபரும், நடிகருமான விசாகனுக்கும் இன்று (பிப்.11) காலை திருமணம் நடைபெற்றது.

Soundarya Rajinikanth, Vishagan Vanangamudi tied knot today

சென்னை லீலா பேலஸ் நட்சத்திர ஹோட்டலில் சவுந்தர்யா-விசாகன் திருமணம் இந்து முறைப்படி இன்று காலை 9-10.30 மணியளவில் மணமகள் சவுந்தர்யாவுக்கு தாலி கட்டினார் விசாகன். இவர்களது திருமண விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமான அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் பங்கேற்றனர்.

சவுந்தர்யாவின் திருமண கொண்டாட்டம் கடந்த பிப்.9ம் தேதி தொடங்கியது, அதையடுத்து பிப்.10ம் தேதி நட்சத்திரங்கள் மற்றும் ரஜினியின் குடும்பத்தினர் கலந்துக் கொண்ட சங்கீத் நிகழ்ச்சி களைக்கட்டியது. இதில் நடிகர் ரஜினிகாந்த், தான் நடித்த ‘முத்து’ படத்தில் இடம்பெற்ற ‘ஒருவன் ஒருவன் முதலாளி’ பாடலுக்கு நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

திருமண நிகழ்ச்சியை தொடர்ந்து இன்று மாலை சவுந்தர்யா-விசாகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்நிலையில் புதுமண தம்பதிகளான சவுந்தர்யா-விசாகன் ஜோடிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.