மீண்டும் நடிக்கிறேன் - கேன்சரில் இருந்து மீண்ட நடிகை நெகிழ்ச்சி

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்டு வந்த பிரபல பாலிவுட் நடிகை சோனாலி பிந்த்ரே மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.

Sonali Bendre returns to work after Cancer treatment, posts emotional message

‘பம்பாய்’ படத்தில் வரும் ‘ஹம்மா ஹம்மா..’ பாடலுக்கு நடனமாடிய சோனாலி பிந்த்ரே, ‘காதலர் தினம்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.பாலிவுட்டிலும் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்த சோனாலி, சமீபகாலமாக மெட்டாஸ்டேட்டிக் கேன்சரால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் கீமோ தெராப்பி சிகிச்சை மேற்கொண்டு வந்தார். மன வலிமையுடன் சிகிச்சை பெற்று தற்போது புற்றுநோயில் இருந்து மீண்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து சிறிது காலம் ஓய்வில் இருந்த சோனாலி, தற்போது மீண்டும் கேமரா முன் நடிக்க தொடங்கியுள்ளார். விளம்பர படம் ஒன்றில் நடித்து வரும் சோனாலி, புற்றுநோய்க்கு பிறகு மீண்டும் நடிக்க வந்த அனுபவம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவை பகிர்ந்துள்ளார்.

அதில், பல வழிகளில் பல கடினமான கட்டங்களை கடந்து நீண்ட ஓய்வுக்கு பின் செட்டிற்கு வந்திருப்பது கனவு போல் உள்ளது. மீண்டும் பணிக்கு திரும்பும் இந்த உணர்வை வார்த்தைகளால் கூற முடியவில்லை. கேமராவை பார்த்து எனது உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.