திருமணத்திற்கு பின் நடிக்க மாட்டேனா?: பிக் பாஸ் ரித்விகா வருத்தம்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

பிக் பாஸ் டைட்டில் வின்னரான நடிகை ரித்விகா திருமணத்திற்கு பிறகு நடிப்பை தொடரப்போவதில்லை என பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Riythvika made clarification on her wedding rumors

பாலாவின் ‘பரதேசி’, பா.ரஞ்சித்தின் ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ திரைப்படங்கள் மூலம் பிரபலமான நடிகை ரித்விகா, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.

தற்போது பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகி வரும் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ திரைப்படத்தின் நாயகியாக ரித்விகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக ரித்விகா விரைவில் திருமணம் செய்துக் கொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து நடிகை ரித்விகா தனது ட்விட்டர் பக்கத்தில் திருமணம் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அவரது ட்வீட்டில், ‘திருமணம் குறித்த கேள்விக்கு அடுத்த வருடம் நடக்க வாய்ப்புள்ளது என்றேன். அதை சரிவர அறியாமல் பத்திரிகைகள் திருமணத்திற்கு பின் நான் நடிப்பை தொடரப்போவதில்லை என்று சேர்த்து எழுதியிருப்பது வருத்தத்தை தருகிறது. திருமணம் என்பது நடிகைகளுக்கு முற்றுப்புள்ளியா? வருத்தம்.’ என தெரிவித்துள்ளார்.