முதன் முறை போலீஸாக பிரபுதேவா மாஸ் காட்டும் 'பொன் மாணிக்கவேல்' டிரெய்லர் இதோ

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

பிரபு தேவா முதன்முறையாக போலீஸ் வேடம் ஏற்று நடித்திருக்கும் படம் பொன் மாணிக்கவேல்.  இந்த படத்தை ஏ.சி. முகில் செல்லப்பன் எழுதி இயக்கியுள்ளார்.

Prabhu Deva and Nivetha Pethuraj starring Pon Manickavel trailer released

டி. இமான் இசையமைத்துள்ள இந்த படத்தில் பிரபு தேவாவுக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் இயக்குநர் மகேந்திரன், சுரேஷ் மேனன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. டிரெய்லரின் தொடக்கத்தில் பதட்டத்தை ஏற்படுத்தும் வண்ணம் கொலை மிரட்டல்  ஒன்று விடுக்கப்படுகிறது. அதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் ? அவர்களின் நோக்கம் என்ன ? என்பதை  திரில்லர் பாணியில் தெரிவிக்கப்பட்டுள்ளது என கணிக்கமுடிகிறது.

முதன் முறை போலீஸாக பிரபுதேவா மாஸ் காட்டும் 'பொன் மாணிக்கவேல்' டிரெய்லர் இதோ VIDEO