Dev All Banner USA

‘என்.ஜி.கே’-வில் வேற லெவல் வெறித்தனம்- தெறிக்கவிடும் சூர்யா ரசிகர்கள்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

நடிகர் சூர்யா நடித்துள்ள ‘என்.ஜி.கே’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

Much awaited Suriya's NGK Teaser officially released

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் செல்வராகவன் இயக்கியுள்ள ‘என்.ஜி.கே’ என்கிற ‘நந்த கோபாலன் குமார்’ திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ளனர். காதலர் தின ஸ்பெஷலாக இப்படத்தின் டீசரை இன்று (பிப்.14) மாலை 6 மணிக்கு வெளியிடப்போவதாக படக்குழு தெரிவித்திருந்தது.

மேலும், காதலர் தினத்தை முன்னிட்டு ரிலீசாகும் கார்த்தியின் ‘தேவ்’ திரைப்படத்துடன் ‘என்.ஜி.கே’ டீசர் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதற்கு முன்பாகவே ‘என்.ஜி.கே’ டீசர் லீக்கானதால், பைரசியை தடுக்க பட தயாரிப்புக் குழு டீசரை முன்கூட்டியே வெளியிட்டுள்ளது.

அரசியல் கதைக்களத்தில் உருவாகியுள்ள ‘என்.ஜி.கே’ அப்டேட்டிற்காக நீண்ட நாட்களாக காத்திருந்த சூர்யா ரசிகர்கள் டீசரை சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். செல்வராகவன் - சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலரில் இடம்பெற்றுள்ள அனல் பறக்கும் வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘என்.ஜி.கே’-வில் வேற லெவல் வெறித்தனம்- தெறிக்கவிடும் சூர்யா ரசிகர்கள் VIDEO