90ML- மாஸ் கிளப்பும் ஓவியாவின் மரண மட்ட பாடல் வீடியோ

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா நடிப்பில் உருவாகியுள்ள 90ML திரைப்படத்தில் வரும் ‘மரண மட்ட’ வீடியோ பாடல் ரிலீசாகியுள்ளது.

Marana Matta Video song from Oviyaa's 90ML released

பெண் இயக்குநர் அனிதா உதீப் இயக்கத்தில் ஓவியா நடித்துள்ள 90ML திரைப்படம் அடல்ட் காமெடி ஜானரில் உருவாகியுள்ளது. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா நடிப்பில் வெளியாகும் 90ML திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது. இதில் கூடுதலாக இப்படத்திற்கு சிம்பு இசையமைத்திருப்பதும் ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நியூ இயர் ஸ்பெஷல் பாடலான ‘மரண மட்ட’ குத்து பாடலை சிம்புவும், மிர்ச்சி விஜய்யும் இணைந்து எழுதியுள்ளனர். இப்பாடலை ஓவியா மற்றும் ஹரிஷ் கல்யாண் பாடியுள்ளனர்.

இப்படம் பிப்.22ம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக 90ML ரிலீஸ் மார்ச்.1ம் தேதிக்கு தள்ளிப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

90ML- மாஸ் கிளப்பும் ஓவியாவின் மரண மட்ட பாடல் வீடியோ VIDEO