Petta USA All Banner

பெயரை மாற்றிக் கொண்ட பிரபல ஹீரோ

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

பிரபு சாலமன் இயக்கிய கயல் படத்தின் மூலம் அறிமுமானவர் சந்திரன். இந்த படம் அவருக்கு நல்ல அடையாளத்தை  தந்தது. அதன் காரணமாக இவர் கயல் சந்திரன் என்று அழைக்கப்படுகிறார்.

Kayal Chandran changed his name Chandramouli

அதனைத் தொடர்ந்து அதே பிரபு சாலமன் தயாரிப்பில் ரூபாய் என்ற படத்தில் நடித்தார். தற்போது இவரது நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் பார்ட்டி, கிரகணம், திட்டம் போட்டு திருடுற கூட்டம் போன்ற படங்கள் வெளியீட்டுக்கு காத்திருக்கின்றன.

இந்நிலையில் இவரது முழுப்பெயர் சந்திரமௌலி. ஆனால் திரைப்படங்களுக்காக இவர் சந்திரன் என தன் பெயரை மாற்றிக்கொண்டிருந்தார். தற்போது திரைப்பெயர் சந்திரமௌலி என்று இருக்கும் எனவும் அதனால் தன்னை சந்திரமௌலி என்றே குறிப்பிடுங்கள் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.