கண்ணான கண்ணே! தந்தை மகள் அன்பைச் சொல்லும் விஸ்வாசம் வீடியோ பாடல் இதோ

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

தல அஜித், நயன்தாரா, ரோபோ ஷங்கர், யோகிபாபு, விவேக், அனிகா உள்ளிட்டோர் நடிப்பில் பொங்கலை முன்னிட்டு வெளியான படம் விஸ்வாசம். தந்தை - மகளுக்கிடையேயான பாசப் போராட்டத்தை உணர்வு பூர்வமாக பேசிய இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

Kannana Kanne video song released from Thala Ajith's Viswasam

டி. இமான் இசையில் இந்த படத்தின் பாடல்கள் பெரும் வெற்றி பெற்றன. குறிப்பாக இந்த படத்தில் இடம் பெற்ற கண்ணான கண்ணே என்ற பாடல் ரசிகர்கள் கண் கலங்க வைத்தது. இந்த பாடல் படத்தில் இடம் பெற்ற சூழ்நிலை ரசிகர்களை மனம் உருகச் செய்தது.

தற்போது இந்த பாடல் வீடியோ யூடியூபில் வெளியாகியுள்ளது. தாமரை எழுதிய இந்த பாடலை சித் ஸ்ரீராம் தன் மனதை வருடும் குரலால் பாடியுள்ளார். இந்த பாடல் வீடியோவுக்கு பெரும் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கண்ணான கண்ணே! தந்தை மகள் அன்பைச் சொல்லும் விஸ்வாசம் வீடியோ பாடல் இதோ VIDEO