மீண்டும் தேவர்மகனுக்கு விசிட் அடித்த கமல்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ‘தேவர்மகன்’ திரைப்படம் படமாக்கப்பட்ட அரண்மனைக்கு நடிகர் கமல் திடீர் விசிட் அடித்துள்ளார்.

Kamal Haasan paid a visit to Thevar Magan House in Pollachi

நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களின் குருத்துக்களை கேட்டு வருகிறார். சமீபத்தில் பொங்கல் பண்டிகையின் போது பொள்ளாச்சிக்கு சென்றிருந்த கமல்ஹாசன், தனது கட்சி நிர்வாகிகளுடன் ‘தேவர்மகன்’ திரைப்படம் படமாக்கப்பட்ட அரண்மனைக்கு சென்றுள்ளார்.

கடந்த 1992ம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியான ‘தேவர்மகன்’ திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் பொள்ளாச்சியில் உள்ள சிங்காநல்லூர் அரண்மனைக்குச் சென்று பார்வையிட்டுள்ளார். 27 வருடங்களுக்கு பிறகு தேவர்மகன் வீட்டிற்குச் சென்ற கமல், படத்தின் ஷூட்டிங்கின் போது நிகழ்ந்த சம்பவங்கள், சிவாஜி கணேசனுடன் இணைந்து நடித்த அனுபவம் குறித்தும் தனது கட்சிக்காரர்களுடன் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பின்னர் அரசியல் பணிகளில் தீவிரம் காட்டவுள்ளதாக கூறப்படுகிறது.