Viswasam All Banner USA
Petta USA All Banner

பேட்ட படத்துக்காக ஜப்பானில் இருந்து வந்து தமிழ் பேசும் ரசிகர்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து சன்பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள படம் பேட்ட.

Japan Rajini fan spoke tamil for Petta

பொங்கலை முன்னிட்டு இன்று வெளியான இப்படம் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது.

நள்ளிரவு முதல் ரசிகர்கள் திரையரங்கம் முன்பு காத்துக்கிடந்து பட்டாசு வெடித்து சூடம் ஏற்றி படத்துக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பளித்தனர்.

படம் குறித்து இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்ததாவது, நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன் . பெருமைக்குரிய தருணம் இது. என்றார்.

தமிழ்நாடு மட்டுமல்ல ஜப்பானிலிருந்து கூட ரசிகர்கள் சென்னை வந்து படம் பார்த்தனர். தங்களுக்கு படம் பிடித்திருப்பதாக கூறினர். அதிலும் குறிப்பாக ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஒருவர், பேட்ட படம் பார்ப்பதற்காக ஜப்பான் நாட்டிலிருந்து சென்னை வந்தேன் என தூய தமிழில் பேசினார்.

இன்னும் சில ரசிகர்கள் தாங்கள் எப்படி ரஜினியை பார்க்கவேண்டும் என நினைத்தோமோ கார்த்திக் சுப்புராஜ் அதனை திரையில் சிறப்பாகக்  கொண்டுவந்துள்ளாக தெரிவித்தார்.

மேலும் மேலும் முழுக்க ரஜினி  ரசிகர்களுக்கான படம் இது. Get Rajinified என்று ரசிகர்கள் தெரிவித்தனர்.

பேட்ட படத்துக்காக ஜப்பானில் இருந்து வந்து தமிழ் பேசும் ரசிகர் VIDEO