வெளியானது 'சர்வம் தாளமயம்' பாடல் வீடியோ

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், நெடுமுடி வேணு, அபர்ணா பாலமுரளி, குமாரவேல், டிடி, வினித் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் சர்வம் தாளமயம்.

Gv Prakash Sarvam Thaala mayam Video song released

இசையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். ராஜீவ் மேனன் - ரஹ்மான் கூட்டணியில் முந்தய படங்களை போலவே இந்த படத்தின் பாடல்களும் வெகுவாக ரசிகர்களை ஈர்த்தது.

இந்நிலையில் இந்த படம் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்திலிருந்து சர்வம் தாளமயம் என்ற பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.

மதன் கார்க்கி எழுதியுள்ள இந்த பாடலை ஹரிச்சரண் மற்றும் அர்ஜூன் சாண்டி பாடியுள்ளனர். இசை சம்பந்தமாக கற்றுக்கொள்ள இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு ஜி. வி. பிரகாஷ் பயணம் மேற்கொள்வது போன்று இந்த பாடல் உருவாக்கப்பட்டிருக்கும்.

வெளியானது 'சர்வம் தாளமயம்' பாடல் வீடியோ VIDEO