‘7ம் அறிவு’-க்கு பின் வர்மாவுக்காக தமிழ் சினிமாவிற்கு வரும் பிரபலம்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நாயகனாக அறிமுகமாகவிருக்கும் ‘வர்மா’ திரைப்படத்தின் புதிய ஒளிப்பதிவாளராக ரவி கே.சந்திரன் ஒப்பந்தமாகியுள்ளார்.

DOP Ravi K Chandran has been roped in for Dhruv's Varma

தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக் திரைப்படம் ‘வர்மா’ என்ற பெயரில் தமிழில் உருவாகி வருகிறது. இ4 எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் பாலா இயக்கிய இப்படம் திருப்தி அளிக்காததால், புதிய படக்குழுவுடன் சேர்ந்து படத்தை மீண்டும் முதலில் இருந்து உருவாக்கப்போவதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி, இப்படத்தில் துருவ் விக்ரமிற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை பனிதா சந்து நடிக்கவுள்ளார். அவரை தொடர்ந்து இப்படத்தின் ஒளிப்பதிவாளராக ரவி கே.சந்திரன் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் விக்ரமின் நெருங்கிய நண்பர் ஆவார். இவர் சூர்யா நடித்த ‘7ஆம் அறிவு’ திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் ‘வர்மா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பணியாற்றவுள்ளார்.

இதில் சுவாரஸ்யமாக ஹிந்தியில் ஷாஹித் கபூர் நடிப்பில் உருவாகி வரும் ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் ஹிந்தி ரீமேக்கான ‘கபீர் சிங்’ படத்தின் ஒளிப்பதிவாளராக ரவி கே.சந்திரனின் மகன் சந்தான கிருஷ்ணன் பணியாற்றி வருகிறார். இப்படத்தை அர்ஜுன் ரெட்டி இயக்குநர் சந்தீப் வாங்கா இயக்கி வருகிறார்.