ஒரு நாள் கதவு திறக்கும் -ஆஸ்கர் வாசலில் அன்பான இயக்குநர்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட, விருது பெற்ற அனைவருக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Director Vignesh Shivn wishes all the Oscars 2019 winners and nominees

‘போடா போடி’, ‘நானும் ரவுடி தான்’ திரைப்படங்களை தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம் சூர்யா நடித்த ‘தானா சேர்ந்த கூட்டம்’.

‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தையடுத்து, தனது அடுத்த திரைப்படத்தின் பணிகளில் விக்னேஷ் சிவன் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், 91வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது.

இதில் இந்தியாவின் ‘பீரியட் எண்ட் ஆஃப் செண்டன்ஸ்’ என்ற ஆவண குறும்படம் ஆஸ்கர் விருதினை வென்றது. இந்த ஆண்டு ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட, ஆஸ்கர் விருதினை வென்ற அனைவருக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவரது ட்வீட்டில், ‘ஒரு நாள் - கதவு திறக்கும்... அருகில் இருப்பதே .. நமது வேலை.. இந்த ஆண்டு ஆஸ்கர் வென்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.