'தில்லுக்கு துட்டு 2'க்கு பிறகு அடுத்த அதிரடி

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

ராம் பாலா இயக்கத்தில் சந்தானம் நடித்து வெளியான படம் 'தில்லுக்கு துட்டு 2'.  திகில், காமெடி என்ற கலந்துகட்டி உருவான இந்த படம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த படம் தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

Director Rambhala begins his shoot Davu next with Dhilluku Dhuddu 2

முதல் பாகத்தை போலவே ஹாரர் காமெடி ஜானரில் இந்த படம் உருவாகியிருந்தது. இந்நிலையில் இயக்குநர் ராம் பாலா தனது அடுத்த படமான 'டாவு' படத்தில் பிஸியாக விட்டார்.

கயல் சந்திரன் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்துக்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். 2எம்பி புரொடக்ஷன் சார்பாக ரகுநான் பிஎஸ் தயாரித்துள்ளார். இந்த படமும் ஹாரர் ரொமான்டிக் காமெடி ஜானரில் உருவாகிவருவதாக கூறப்படுகிறது.

வருகிற கோடைவிடுமுறையை முன்னிட்டு இந்த படம் வெளியாகும் என திட்டமிடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதனால் இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்றவருகிறது.