அசர வைக்கும் அனுஷ்காவின் புது அவதாரம்- ஃபிட்னஸ் சீக்ரெட் என்ன தெரியுமா?

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

‘பாகுபலி’ நாயகி அனுஷ்கா தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆகியுள்ள புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

Baahubali actress Anushka shetty's new look goes viral

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியான ‘பாகமதி’ திரைப்படத்திற்கு பிறகு அனுஷ்கா நடிப்பில் எந்த திரைப்படமும் வெளியாகவில்லை. ‘இஞ்சி இடுப்பழகி’ திரைப்படத்திற்காக உடல் எடையை கூட்டி நடித்த அனுஷ்கா, ‘பாகுபலி 2’ திரைப்படத்தில் நடிக்கும்போதே உடல் எடை கூடியதால் பல சிக்கல்களை சந்தித்ததாக தகவல்கள் பரவின.

இந்நிலையில், புதிதாக திரைப்படங்கள் ஏதும் ஒப்பந்தம் செய்யாமல், சற்று இடைவெளி எடுத்து உடல் எடையை குறைக்க தீவிர உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு, ஆயுர்வேத சிகிச்சை என பல முயற்சிகளை மேற்கொண்டு தற்போது உடல் எடையை குறைத்துள்ளார்.

உடல் எடையை குறைப்பதற்காக வெளிநாடுகளில் சிறப்பு சிகிச்சைகளை மேற்கொண்ட அனுஷ்கா, பிரபல ஊட்டச்சத்து நிபுணர், ஆரோக்கியம், லைப்ஸ்டைல் குறித்து பயிற்சிகளை வழங்கும் Luke Countinho என்பவரின் ஆலோசனையின்படி உணவு பழக்கங்களை பின்பற்றி தனது உடல் எடையை குறைத்துள்ளார்.

வாழ்க்கை முறை என்பது ஒரு மதம் என்பதை வலுயுறுத்தும் நோக்கில் பிரத்யேகமான முயற்சி ஒன்றை மேற்கொண்டதாகவும், விரைவில் அது குறித்து அறிவிக்கவுள்ளதாகவும் Luke Countinho தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அத்துடன் அவர் பகிர்ந்த அனுஷ்காவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தற்போது கோனா வெங்கட் இயக்கத்தில் உருவாகவிருக்கும் ‘சைலன்ஸ்’ என்ற திரைப்படத்தில் அனுஷ்கா, நடிகர் மாதவனுடன் இணைந்து நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் விரைவில் அமெரிக்காவில் துவங்கவுள்ளது. இதில் ஹாலிவுட் நடிகர் ஒருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.