அதர்வாவின் ‘பூமராங்’ டிரைலர் இதோ

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

நடிகர் அதர்வா நடித்துள்ள ‘பூமராங்’ திரைப்படத்தின் இரண்டாவது டிரைலர்  வெளியாகியுள்ளது.

Atharvaa's Boomerang Trailer 2 is out now

‘ஜெயம் கொண்டான்’, ‘இவர்ன் தந்திரன்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஆர்.கண்ணன் தயாரித்து, இயக்கியுள்ள இப்படத்தில் மேகா ஆகாஷ்,  இந்துஜா, ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், சுஹாசினி மணிரத்னம், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

அர்ஜுன் ரெட்டி திரைப்படம் மூலம் பிரபலமான ரதன் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார். சமூக பிரச்னையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம் மகளிர் தினத்தை முன்னிட்டு வரும் மார்ச்.8ம் தேதி ரிலீசாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் இரண்டாவது டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

அதர்வாவின் ‘பூமராங்’ டிரைலர் இதோ VIDEO