சூப்பர் ஸ்டார்கிட்ட இதை கேட்க மிஸ் பண்ணிட்டேன் - வருந்தும் அர்ச்சனா!

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்தது மிகவும் பிரபலமானது.

Anchor Archana missed to ask few things from Super Star Rajinikanth in an interview

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்த ‘2.0’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருந்த நிலையில், அப்படத்தின் சேட்டிலைட் உரிமத்தை கைப்பற்றிய பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ரஜினிகாந்துடன் நேர்காணல் ஒன்றை நடத்தியது.

அந்த நேர்காணலை பிரபல டிவி தொகுப்பாளினி அர்ச்சனா தொகுத்து வழங்கினார். நீண்ட வருடங்களுக்குப் பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம், ஃபிலிம் ரோலில் தொடங்கிய அவரது ஆரம்பக் கால சினிமா பயணம் முதல் அதிநவீன 3டி தொழில்நுட்பத்தில் நடித்த அனுபவம் வரை பல சுவாரஸ்யமான கேள்விகளை ரஜினியிடம் கேட்டார்.

அர்ச்சனாவின் இந்த நேர்காணல் மிகவும் பிரபலமானது. இந்நிலையில், சிறந்த டிவி தொகுப்பாளினி என்ற பிரிவில் அர்ச்சனாவிற்கு Behindwoods Gold Medals விழாவில் விருது வழங்கப்பட்டது. பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி(டிடி)-யிடம் விருதை பெற்ற அர்ச்சனா, மக்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி தெரிவித்தார்.

அத்துடன் அவரிடம் சூப்பர் ஸ்டார் நேர்காணல் குறித்து கேட்ட போது, சினிமாவிற்கு வந்த பிறகு தான் சிவாஜி ராவ் என்ற பெயர் ரஜினியாக மாறியது. ரஜினி என்ற பெயர் வைத்த பிறகு முதன்முதலில் ஒருவர் உங்களை அழைக்கும்போது எப்படி உணர்ந்தீர்கள் என்ற கேள்வியை மட்டும் ரஜினி சாரிடம் கேட்க மறந்துவிட்டேன். நிச்சயம் ஒரு நாள் கேட்பேன் என கூறினார்.

சூப்பர் ஸ்டார்கிட்ட இதை கேட்க மிஸ் பண்ணிட்டேன் - வருந்தும் அர்ச்சனா! VIDEO