மிகவும் பிரபலமான ‘ராஜா ராணி’ ஜோடிக்கு எப்போ கல்யாணம் தெரியுமா?

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

வெள்ளித்திரையில் ஜொலிக்கும் நாயகிகளை போன்று சின்னத்திரை நாயகிகளுக்கும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். அந்த வகையில் மிகவும் பிரபலமான ‘ராஜா ராணி’ சீரியலில் நடிக்கும் ஆலியா மானசாவிற்கு என்று தனியாக ரசிகர்கள் உள்ளனர்.

Alya Manasa and Sanjeev reveals their Wedding Plan

அடிக்கடி டப்ஸ்மேஷ் வீடியோ வெளியிட்டு சமூக வலைத்தளங்களிலும் ஆலியா ரொம்ப ஃபேமஸ். இந்நிலையில், ராஜா ராணி சீரியலில் கணவன் மனைவியாக நடிக்கும் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் இருவரும் காதலிப்பதாக தகவல்கள் வெளியாகின.

ராஜா ராணி சீரியலின் செம்பா-கார்த்திக் ஜோடிக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு உள்ள நிலையில், நிஜத்திலும் இருவரும் காதலிப்பதாக சமீபத்தில் தெரிவித்தனர். இதனை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் ஜோடியாக பல டப்ஸ்மேஷ் வீடியோக்களை வெளியிட்டனர்.

இந்நிலையில், Behindwoods Gold Medals விருதுகளில் மிகவும் பிரபலமான ஜோடி என்ற பிரிவில் ஆலியா மானசாவும், சஞ்சீவும் விருது பெற்றனர். அப்போது பேசிய சஞ்சீவ் மீண்டும் ஒருமுறை தான் ஆலியாவை காதலிப்பதாக தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து அவர்களது கல்யாணம் குறித்து கேள்விக்கு பதிலளித்த ஆலியா, இப்போதைக்கு கல்யாணம் செய்யும் முடிவில் இல்லை. நடிப்பில் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டு முன்னேற வேண்டும். அதன் பிறகு திருமணம் நடக்கும் என்று தெரிவித்தார்.

மிகவும் பிரபலமான ‘ராஜா ராணி’ ஜோடிக்கு எப்போ கல்யாணம் தெரியுமா? VIDEO