Petta USA All Banner

விஸ்வாசம் படத்தின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

அஜித் - சிவா கூட்டணி நான்காவது முறையாக இணைந்த படம் விஸ்வாசம். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் நயன்தாரா, விவேக், யோகிபாபு, ரோபோ சங்கர் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர்.

Ajith's Viswasam chennai box office collection

டி. இமான் இசையமைத்திருந்த இந்த படத்துக்கு பாடல்களும் மிகப்பெரிய பலமாக அமைந்திருந்தது. 

காதல், ஆக்சன், சென்டிமென்ட் என கலந்துகட்டி உருவாகியிருந்த இந்த படம் பொங்கலை முன்னிட்டு கடந்த 10 ஆம் தேதி வெளியாகியிருந்தது.

இந்த படம் நல்ல விதமான விமர்சனங்களை சந்தித்த இந்த படம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.  அதன் தாக்கம் வசூலிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படத்துடன் விஸ்வாசம் வெளியாகியிருந்ததால் இந்த படத்தின் வசூல் நிலவரங்களை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

சென்னையில் மட்டும் இந்த படம் நான்கு நாட்களில் சுமார் ரூ. 3.94 கோடி வசூலித்துள்ளது. தமிழ்நாடு முழுவதுக்குமான சரியான வசூல் நிலவரம் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.