வீட்டில் வேலை செய்யும் சிறுமி சித்திரவதை? - நடிகை பானுப்பிரியா விளக்கம்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

நடிகை பானுப்பிரியா வீட்டில் வேலைப்பார்க்கும் தனது மகள் சித்திரவதை செய்யப்படுவதாக ஆந்திராவைச் சேர்ந்த பெண் குற்றம் சாட்டிய  நிலையில், நடிகை பானுப்பிரியா அதனை மறுத்துள்ளார்.

Actress Bhanupriya denies allegations on Harassing 14-yr old domestic help

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரியைச் சேர்ந்த பிரபாவதி என்பவர் ஏஜெண்ட் மூலம் தனது 14 வயது மகளை நடிகை பானுப்பிரியாவின் வீட்டிற்கு வேலைக்கு அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், பானுப்பிரியா குடும்பத்தினர் தனது மகளை சித்திரவதை செய்வதாகவும், பாலியல் ரீதியாக தொல்லைக் கொடுப்பதாகவும், உறவினர்களை பார்க்க அனுமதிப்பதில்லை என்றும் சமல்கோட்டா காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தார்.

இவ்விவகாரம் தொடர்பாக Behindwoods க்கு நடிகை பானுப்பிரியா தெரிவிக்கையில், தன் மீதும், தனது சகோதரர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டினை மறுத்துள்ளார். வயதை மறைத்து அந்த சிறுமி பணியில் சேர்த்ததாகவும், தமது வீட்டில் பணம் திருடியதை தட்டிக் கேட்டதால் சிறுமியின் தாயார் பொய் புகார் அளித்திருப்பதாகவும் பானுப்பிரியா குற்றம் சாட்டியுள்ளார்.

உண்மைக்கு புறம்பாக தான் சம்பளம் கொடுக்கவில்லை என்றும், தனது சகோதரர் தவறாக நடந்துக் கொண்டார் என்றும் பொய் குற்றம்சாட்டு கூறுவதை ஏற்க முடியாது என பானுப்பிரியா கூறினார். மேலும், தனது பெயர், புகழை கெடுக்கும் நோக்கில் கொடுக்கப்பட்ட இந்த பொய் புகாரை சட்ட ரீதியாக எதிர்க்கொண்டு நடவடிக்கை எடுப்பேன் எனவும் நடிகை பானுப்பிரியா தெரிவித்துள்ளார்.