நடிகர் மனோபாலா வீட்டு திருமண விழாவில் பங்கேற்ற கோலிவுட் பிரபலங்கள்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

நடிகர் மனோபாலாவின் மகன் ஹரிஷுக்கும், பிரியா என்பவருக்கும் நாளை காலை திருமணம் நடைபெறுகிறது.

Actor Manobala's son Harish gets married to Priya today

நடிகரும், இயக்குநருமான மனோபாலாவின் மகன் ஹரிஷுக்கும், பிரியா என்பவருக்கும் சென்னையில் நாளை(பிப்.11) காலை திருமணம் நடைபெறுகிறது.. அதையொட்டி இன்று மாலை கிண்டியில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஹோட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர்கள் சத்யராஜ், கவுண்டமணி, பொன்வண்ணன், சரண்யா பொன்வண்ணன், ராதாரவி, சிவகார்த்திகேயன், சதீஷ், தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன், இயக்குநர்கள் பாரதிராஜா, கே.எஸ்.ரவிக்குமார், ஹெச்.வினோத் உள்ளிட்ட ஏராளமான திரை பிரபலங்கள் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.